இன்றைய ராசிபலன் 06.08.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய ராசிபலன் 06.08.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்:

அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

ரிஷபம்:

உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.

மிதுனம்:

சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் செலவுகள் அதிகரிக்கும்.

கடகம்:

சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். ஆனால், மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. அரசு அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடும் மனக் கசப்பும் உண்டாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

சிம்மம்:

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.

கன்னி:

எதிர்பாராத தனலாபம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி வரும் என்றாலும் அதனால் ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகவே ஏற்றுக்கொள்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் முதலீடு செய்யவேண்டி இருக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபடுவதையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

துலாம்:

இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். கொடுத்த கடன் திரும்ப வரும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். கோர்ட் வழக்கு தள்ளிப்போகும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் மகிழ்ச்சி தருவதாக முடியும்.

விருச்சிகம்:

வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வரும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உற்சாகம் தருவதாக அமையும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

தனுசு:

சிலருக்கு எதிர்பாராத பணவரவு உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் மூலம் அனுகூலம் உண்டாகும்.

மகரம்:

நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் ஏற்படும்.

கும்பம்:

கும்ப ராசிக்கு இன்றைய ராசி பலன் படி புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

மீனம்:

புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வாழ்க்கைத்துணை வழியில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்துச் செல்லவும். மாலையில் சிலருக்கு எதிர்பாராத பணவரவு உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.

You might also like